மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சூழ்நிலைகள் குறித்த கலந்துரையாடல் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு பிரேரணை முன்வைக்கப்பட்டு விவாதம் இடம்பெறும் நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்களுக்கு விசேட உரை ஆற்றுகின்றார்.
இதன்போது கருது தெரிவித்த ஜனாதிபதி,
மத்திய கிழக்கு பிரச்சினை தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே எமது நிலைப்பாடு நடுநிலைமை என்பதாகும்.
எமது தாய்நாட்டின் கௌரவம், நீதிக்கான கேள்வி மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றை எமது நடுநிலைமையைப் பேணுவதன் மூலமே எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே, எவ்வித அழுத்தங்கள் மத்தியிலும் இந்த நடுநிலைமை நழுவிப்போக இடமளிக்க மாட்டோம்.
ஆனால், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுவதை நான் அறிவேன்.
நாம் ஏதோ ஒரு தரப்பிற்கு சார்பாக இருக்கிறோம் என்றும், சில தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்பது போன்றும் கருத்துக்கள் நிலவுகின்றன.
அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்பதை உங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.












