அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஷிரெவ்ஸ்போர்ட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தந்தை தனது ஏழு குழந்தைகளையும் மற்றுமோர் குழந்தையையும் கொலை செய்துள்ளார்.
இச்செயலை காவல்துறை “குடும்ப வன்முறை” என விவரித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகள் ஒரு வயது முதல் 14 வயதுடையவர்கள் என கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை 05:00 மணியளவில் (10:00 GMT) துப்பாக்கிச் சூடு தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயடைந்த குழந்தைகளின் தாய் உட்பட இரண்டு வயதுவந்த பெண்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகிறது.
துப்பாக்கிச் சூடுகளுக்குப் பின்னர் சந்தேக நபர் ஒரு வாகனத்தைக் கடத்திச் சென்றதாகவும், அண்டை மாவட்டமான போசியர் பாரிஷுக்குள் சென்ற துரத்தலின் போது காவல்துறை அந்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து லூசியானா மாநில காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.














