ஒரு கிலோ கிராமுக்கும் அதிகம் எடை கொண்ட குஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்க மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் 35 வயதான இந்திய நாட்டவர் என பொலிஸ் அடையாளம் கண்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.














