சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘Walk For Peace’ என்ற அமைதிக்கான நடைப்பயணம் அரச அனுசரணையுடன் இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது.
அமைதிக்கான நடைப்பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று காலை 6.30 மணிக்கு இந்த அமைதி நடைப்பயணம் ஆரம்பாகியிருந்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை, 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்களாக 200-க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் அமைதிக்காக மேற்கொண்ட நடைப்பயணம் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
அந்தப் பயணமே தற்போது இலங்கையில் ‘ஏஹிபஸ்ஸிகோ’ அமைதி நடைப்பயணம் என்ற பெயரில் அரச அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பன்னாகர தேரர் தலைமையிலான பௌத்த தேரர்கள் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தனர்.
இந்த அமைதி நடைப்பயணத்தில் ‘ஆலோகா’ எனும் நாயும் தேரர்களுடன் இணைந்துள்ளமை விசேட அம்சமாகும் இந்த நடைப்பயணத்தின் முதல் நாளான இன்று மாத்தளை அலுவிஹாரை வரை பயணம் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது.













