களுத்துறை, வெட்டுமக்கடை பகுதியில் இன்று (28) காலை ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கார் களுத்துறை, தெபுவான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகயில் கைவிடப்பட்ட நிலையில் கண்ணெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த தகவலின்படி குறித்த கார், தெபுவான, நெபட பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையத்திற்கு அருகில் கண்ணெடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறையின் வெட்டுமக்கடை பகுதியில் இன்று காலை (28) இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.
காரில் வந்த துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பாதிக்கப்பட்டவர், களுத்துறை நகோட வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்களைப் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












