கடந்த 1990ஆம் ஆண்டுகளில் உலகையே வியக்க வைத்ததும், ஆரம்பத்தில் 39 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வாங்கப்பட்டதுமான அரிய வகை சூப்பர் கம்ப்யூட்டர்கள் தற்போது பிரித்தானியாவில் ஏலத்திற்கு வரவுள்ளன.
பிரித்தானியாவின் வில்ட்ஷயர் பகுதியில் அமைந்துள்ள ‘ஆர்.டபிள்யூ.பி ஏல நிறுவனம்’ (RWB Auctions) இந்த மாபெரும் கணினிகளை ஏலம் விடவுள்ளது.
ஏலத்திற்கு வரவுள்ள இந்த மூன்று சூப்பர் கம்ப்யூட்டர்களும் ஒவ்வொன்றும் சுமார் மூன்று முதல் நான்கு தொன் (Tonnes) எடையைக் கொண்டவையாகும்.
உலகப் புகழ்பெற்ற ‘கிரே’ (Cray) நிறுவனத்தினால் இவை தயாரிக்கப்பட்டிருந்தன.
இன்றும் கூட பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் (Met Office) மற்றும் பிரித்தானிய உளவு அமைப்பான GCHQ ஆகியவற்றிற்கான அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர்களை இந்த ‘கிரே’ நிறுவனமே தயாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் விண்வெளி, வானிலை போன்ற துறைகளின் ஆரம்பக்கால ஆராய்ச்சிக்கு உதவிய இந்த சூப்பர் கம்ப்யூட்டர்களை வாங்குவதற்குப் பல சர்வதேசத் தொழில்நுட்ப அருங்காட்சியகங்களும், சேகரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















