வட அயர்லாந்தின் டவுன் கவுண்டியில் உள்ள டவுன்பாட்ரிக் பகுதியில், திருடப்பட்ட பொலிஸ் வாகனம் ஒன்றால் மோதப்பட்டு பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது தற்காப்பிற்காக அந்த அதிகாரி தனது துப்பாக்கியால் சுட்டுள்ள நிலையில், அவரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த அதிகாரிக்கு சக பொலிஸ் அதிகாரிகளும், உள்ளூர் பொதுமக்களும் இணைந்து சம்பவ இடத்திலேயே அவசர முதலுதவி சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.
காயமடைந்த அதிகாரி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்.
பொலிஸ் அதிகாரியை வாகனத்தால் மோதிக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் கீழ் 27 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட திருடப்பட்ட பொலிஸ் கார், காயமடைந்த அதிகாரியின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அனைத்தும் தடயவியல் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
மேலும், பொலிஸார் துப்பாக்கியைப் பயன்படுத்தியதால், வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி வட அயர்லாந்து பொலிஸ் குறைதீர்ப்பாளர் அலுவலகத்திற்குத் தகவல் வழங்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.














