கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 13 சீன நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இரண்டு விமானங்களில் இந்தக் குழுவினர் வந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருகை முனையத்தில் 22 பயணப் பைகளுடன் அவர்கள் இடைமறிக்கப்பட்டனர்.
அப்பைகளுக்குள் அதிகாரிகள் 189,600 சிகரெட் குச்சிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இவற்றின் பெறுமதி 28,440,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 28 முதல் 45 வயதுக்குட்பட்ட தொழிலதிபர்கள் என விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.












