• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/28
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் இணைந்து, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, தற்போது வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் சேவைத் தரத்தை உயர்த்துதல், நிர்வாக மற்றும் வள ஒதுக்கீட்டு வசதிகளை மேம்படுத்துதல், நோயாளர்களுக்கான சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.

அத்துடன், வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை, விசேட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்களின் தேவைகள், சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் அமைச்சர்கள் நேரடியாக கலந்துரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தேவைகள் மற்றும் சேவை மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.

தொடர்ந்து, வைத்தியசாலையின் பல்வேறு வார்டுகளுக்கும் சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் நலன்கள் குறித்து விசாரித்ததுடன், மருத்துவ சேவை வழங்கப்படும் நடைமுறைகளையும் பார்வையிட்டனர்.

இந்த கண்காணிப்பு விஜயத்தில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் சாலிந்த பண்டார, பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எஸ். ஸ்ரீதரன், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சமன் பதிரண, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ. தேவநாயகன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் டி. சத்தியமூர்த்தி, விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடிக் கட்டிடத்தின் பணிகளை அடுத்த ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்ய முடியும் என நம்புகின்றோம்.

இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எமக்கு கிடைத்துள்ளன.

குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தொடர்பாக பல்வேறு வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிர்வாக கட்டமைப்பை உடனடியாக மாற்றாமல் தொடர்வதே எமது நிலைப்பாடாகும்.

அதேவேளை, நீங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு அமைவாக, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை விசேட பிரிவாக மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவது குறித்தும், எதிர்காலத்தில் முழு வைத்தியசாலையையும் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்படுகின்றன.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும், வைத்தியசாலை நிர்வாகம், வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.

இதற்காக அமைச்சின் ஊடாக விசேட குழுவொன்றை நியமித்து, தேவையான தகவல்கள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதே பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும்” என்றார்.

இதன்போது உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மக்களின் சுகாதார சேவையில் மிக முக்கியமான பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு வளக்குறைபாடுகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர். அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அரசாங்கம் முழு கவனம் செலுத்தியுள்ளது. அவற்றுக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களுக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு தரமான, சமமான மற்றும் திறன்மிக்க சுகாதார சேவையை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கும். என தெரிவித்தார்.

blank

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

Next Post

சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை!

Related Posts

சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை!
அம்பாறை

2026-06-28
பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்
இலங்கை

காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!
இலங்கை

இலங்கையின் இன்றைய வானிலை நிலவரம்

2026-06-28
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

2026-06-27
Next Post
சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை!

சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை!

சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை!

0
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

0
காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

0
பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

0
கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

0
சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை!

சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை!

2026-06-28
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

2026-06-28
பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

2026-06-28
காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

2026-06-28
கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

கட்சி மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளீர்க்க வேண்டும்

2026-06-28

Recent News

சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை!

சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை!

2026-06-28
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

2026-06-28
பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

2026-06-28
காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

2026-06-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.