• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/01
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் (01) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆரம்ப நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

அத்துடன், சாவகச்சேரி பிரதேச செயலாளர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொது முகாமையாளர், வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் யாழ். மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத் தலைவர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்து வசதிக்கான பிரத்தியேகச் சேவையான ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் மாணவர்களிடமிருந்து அரைவாசிப் பயணக் கட்டணம் மாத்திரமே அறவிடப்படுவதுடன், எஞ்சிய தொகை அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்படுகின்றது.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் இரண்டு தனியார் பேருந்துகள் இச்சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.

உசனிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்துச் சேவையும், உசனிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பேருந்துச் சேவையுமே ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இப்புதிய சேவையின் சிறப்பம்சமாக, மாணவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களது பெற்றோரின் கைத்தொலைபேசி இலக்கங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, மாணவர்களுக்குப் பிரத்தியேக ‘டிஜிட்டல் அட்டை’ ஒன்று வழங்கப்படும்.

மாணவர் பேருந்தில் ஏறி குறித்த டிஜிட்டல் அட்டையைத் தொடுதிரையில் காண்பித்தவுடனேயே, அவர் பேருந்தில் ஏறிய நேரம் உள்ளிட்ட விவரங்கள் பெற்றோரின் தொலைபேசிக்கு உடனடியாகக் குறுஞ்செய்தியாகச் சென்றடையும்.

அதேபோன்று, மாணவர் பேருந்திலிருந்து இறங்கும்போதும் தொடுதிரையில் அட்டையைக் காண்பித்ததும், பாதுகாப்பாக இறங்கிய நேரத் தகவல் பெற்றோரின் தொலைபேசிக்குச் செல்லும்.

இதன் மூலம் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு முற்றுமுழுதாக உறுதிப்படுத்தப்படுகின்றது.

மிகவும் முன்மாதிரியான இந்த டிஜிட்டல் செயற்றிட்டத்தை, தனியார் பேருந்தின் உரிமையாளரே தனது சொந்தச் செலவில் நடைமுறைப்படுத்தியுள்ளமை விசேட அம்சமாகும்.

வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் இரண்டு ‘சிசு செரிய’ சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலும் இன்றைய தினம் இரண்டு சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் மாகாணத்தின் ஏனைய இடங்களுக்கும் இந்த பேருந்துச் சேவைகள் விரிவுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

blank blank

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தன்சலில் இளைஞர் மீது தாக்குதல்; 5 நபர்கள் கைது!

Next Post

டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

Related Posts

$200 மில்லியன் நிதியை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி
இலங்கை

2026-07-01
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள்

வருமானத்திற்காக சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் – இளங்குமரன் கண்டனம்!
இலங்கை

வருமானத்திற்காக சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் – இளங்குமரன் கண்டனம்!

2026-07-01
Next Post
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

ஸ்கொட்லாந்தில் எபோலா சந்தேகம் – பரிசோதனையில் நோய் இல்லை என உறுதி

விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
$200 மில்லியன் நிதியை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

$200 மில்லியன் நிதியை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

0
வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!

வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!

0
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!

0
விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

0
ஸ்கொட்லாந்தில் எபோலா சந்தேகம் – பரிசோதனையில் நோய் இல்லை என உறுதி

ஸ்கொட்லாந்தில் எபோலா சந்தேகம் – பரிசோதனையில் நோய் இல்லை என உறுதி

0
$200 மில்லியன் நிதியை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

$200 மில்லியன் நிதியை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

2026-07-01
வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!

வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!

2026-07-01
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!

2026-07-01
விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

2026-07-01
ஸ்கொட்லாந்தில் எபோலா சந்தேகம் – பரிசோதனையில் நோய் இல்லை என உறுதி

ஸ்கொட்லாந்தில் எபோலா சந்தேகம் – பரிசோதனையில் நோய் இல்லை என உறுதி

2026-07-01

Recent News

$200 மில்லியன் நிதியை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

$200 மில்லியன் நிதியை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

2026-07-01
வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!

வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!

2026-07-01
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!

2026-07-01
விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

2026-07-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.