• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதல்- பஹ்ரைன், குவைத், கட்டார் மீது ஈரான் ஏவுகணை வீச்சு!

மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதல்- பஹ்ரைன், குவைத், கட்டார் மீது ஈரான் ஏவுகணை வீச்சு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/09
in அமொிக்கா, ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக இரண்டாவது இரவாகப் பயங்கர குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் மூலோபாய மையங்கள் மீது தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களால் ஈரானில் கடந்த இரண்டு நாட்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 78 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஈரானின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டியுள்ள புஷெஹ்ர் , சபஹார் , பண்டார் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட முக்கிய ஈரானிய நகரங்களை இலக்கு வைத்து அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இத்தாக்குதல்கள் குறித்துப் பேசியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சர்வதேசச் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை ஈரான் குறிவைத்துள்ளது.

இதன்படி, அமெரிக்க ராணுவத் தளங்கள் செயல்பட்டு வரும் அண்டை நாடுகளான பஹ்ரைன், குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் தற்கொலைப்படைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரான் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த அரபு நாடுகளும் தற்பொழுது பெரும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளன.

இதற்கிடையில், சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலம் ஈராக்கின் நஜாஃப் (Najaf) மற்றும் கர்பலா (Karbala) ஆகிய புனித நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலியுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: attackDonald TrumpIranUSAworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணை கோருகிறது BASL!

Next Post

கைதிகளின் பாதுகாப்பு, சிறை அணுகலை உறுதி செய்யவும்; மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்புரை!

Related Posts

தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!
இலங்கை

நாவலவில் நடத்தப்பட்ட தாக்குதலில் நபரொருவர் உயிரிழப்பு!

2026-08-15
சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!
இலங்கை

சிறையிலிருந்து தப்பிய 700-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயம்!

2026-08-15
அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!
அமொிக்கா

அதிக எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தல்!

2026-08-15
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழப்பு!

2026-08-15
கடலில் சிக்கிய கடற்படை கப்பல்: விமானப்படை ஹெலிகொப்டர்களுடன் அவசர மீட்புப் பணி!
இலங்கை

கடலில் சிக்கிய கடற்படை கப்பல்: விமானப்படை ஹெலிகொப்டர்களுடன் அவசர மீட்புப் பணி!

2026-08-15
எல் நினோ வெப்பத்தால் மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பு!
இலங்கை

எல் நினோ வெப்பத்தால் மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பு!

2026-08-15
Next Post
கைதிகளின் பாதுகாப்பு, சிறை அணுகலை உறுதி செய்யவும்; மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்புரை!

கைதிகளின் பாதுகாப்பு, சிறை அணுகலை உறுதி செய்யவும்; மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்புரை!

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பிசியோதெரபிஸ்ட் கொலை வழக்கு; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!

எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு டெங்கு தொற்று!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.