கண்டி மாவட்டத்தில் இன்று (22) நான்கு மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கண்டி பிரதான நீர் விநியோகத் திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
இதன்படி, ராஜபிஹில்ல, மெதவல (பழையது), மெதவல (புதியது) மற்றும் கலகெதர சேவை மையங்கள் மற்றும் மாவத்தகம சேவைப் பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும்.
தற்காலிக நீர் விநியோகத் தடையால் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ள NWSDB, குறித்த பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர் போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.











