கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய அடிப்படை உரிமை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வரவிருக்கும்கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்யுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டது.
முதல் மற்றும் இரண்டாம் முறையாகத் தேர்வு எழுதும் ஐந்து மாணவர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













