இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 499 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் 45வது நாளான இன்று (6) 8 மனித எலும்பு குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 5 மனித எலும்புக்கூடுகள் . அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தமாக 494மனித என்பு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன .
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகள் இடம்பெற்றன.
சட்டத்தரணிகள், பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருளியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் பங்குபற்றியிருந்தனர்.














