இயக்குனர் மாரிமுத்துவின் இயக்கத்தித்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடித் திரைப்படமான ‘தர்மன்’-இன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளதாக படப்பிடிப்புக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மூத்த நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’, ஒரு காணொளியுடன் இந்தத் தகவலைத் தனது சமூக ஊடகப் பக்கங்களில் இன்று (13) காலை வெளியிட்டது.
அந்தக் காணொளியில், படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த் இருப்பதும், அஸ்வத் மாரிமுத்து அவருடன் உரையாடிக்கொண்டிருப்பதும் இடம்பெற்றிருந்தன.
காணொளிக் காட்சியில் முருகர் வேல் சின்னம் பதித்த காப்புடன் ரஜினிகாந்தின் லுக்கை அஸ்வத் மாரிமுத்து டிசைன் செய்த விதமே அசத்துகிறது.

சூப்பர் ஸ்டாரின் ஐகானிக் பேக் போஸ் முதல் அவரது ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தையும் அஸ்வத் மாரிமுத்து பார்த்து பார்த்து தர்மன் படத்தில் செதுக்கி வருகிறார்.
இந்த படத்தில் சிம்ரன், ராஷி கன்னா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தை உருவாக்குவது குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தோற்றம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதைக் காட்டும் ‘மேக்கிங்’ (making) வீடியோ ஒன்றை, தயாரிப்புத் தரப்பினர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.







