• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/26
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தப் புனிதமான தருணத்தில், இந்த உலகமானது உலகளாவிய போர்ச் சூழல்களிலிருந்து விடுபட்டு, அமைதியானதொரு உலகமாக மாற்றம் பெற வேண்டுமென மனமாரப் பிரார்த்திப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மீலாதுன் நபி விழாவினை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முஹம்மது நபி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்கள் மிகுந்த இறைபக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் “மீலாதுன் நபி” நாளுக்காக வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துகொள்ள கிடைத்தமை நான் பெற்ற பாக்கியமாகும்.

நபிகள் நாயகம் அவர்கள் அகில உலகிற்கும் போதித்தது அமைதி, சமத்துவம், கருணை மற்றும் பரஸ்பர மரியாதையின் உன்னத செய்தியையேயாகும்.

தற்போதைய உலகளாவிய சமூகம் பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் மானுடவியல் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கின்றது.

குறிப்பாகக் கொடூர யுத்த மோதல்கள் காரணமாக நிரபராதிகளான மனித உயிர்கள் பலியாகும் துன்புறுத்தலுக்குள்ளாகும் பின்னணியில், நபிகள் நாயகம் அவர்களின் அந்தத் தொலைநோக்குத் தத்துவமானது எக்காலத்தையும் விட இன்று மிகவும் பொருந்துகின்றது என்பதே எனது புரிதலாகும்.

குறிப்பாக, நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையிலிருந்து தற்போதைய சமூகத்திற்கும் நமது நாட்டிற்கும் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகச் சிறந்த முன்மாதிரிகளாக, நீதி நியாயம், மதச்சகிப்புத்தன்மை மற்றும் பொதுமக்களின் நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 

பல்வேறு இனங்களையும் மதங்களையும் சார்ந்தவர்கள் வாழும் ஒரு நாடு என்ற வகையில், நாம் ஒருவரையொருவர் புரிந்து உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்து எழுச்சி பெறுவதற்கு நபிகள் நாயகம் அவர்களின் முன்மாதிரிகளை நடைமுறையில் நமது வாழ்க்கைக்குள் உள்வாங்கிக்கொள்ளுதல் வேண்டும்.

நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தப் புனிதமான தருணத்தில், இந்த உலகமானது உலகளாவிய போர்ச் சூழல்களிலிருந்து விடுபட்டு, அமைதியானதொரு உலகமாக மாற்றம் பெற வேண்டுமென மனமாரப் பிரார்த்திக்கின்றேன். 

அத்தோடு, உலகம் முழுவதிலும் போரின் கொடூரத்தினாலும் துன்புறுத்தல்களினாலும் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து வேதனையடையும் அனைத்து மக்களுக்கும் அமைதி கிடைக்க வேண்டும் என்பதே நம் அனைவரினதும் ஒரே பிரார்த்தனையாக இருக்க வேண்டும் என்பதே எனது அவாவாகும்.

இம்முறை கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு, நீர்கொழும்பு பெரியமுல்லை அல் ஹிலால் தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெறும் தேசியக் கொண்டாட்டமானது, நமது நாட்டினுள் பன்முகத்தன்மையின் அழகைப் போற்றிப் பாராட்டி மத நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேலும் பலப்படுத்துவதற்குக் கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என நான் நம்புகிறேன்.

இந்த தேசிய விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பாடுபடும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உள்ளிட்ட அமைப்புக் குழுவினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனிதநேயமிக்க, இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அமைதியும், சௌபாக்கியமும், சகோதரத்துவமும், மகிழ்ச்சியும் நிறைந்த இனிய மீலாதுன் நபி தின நல்வாழ்த்துகள் – என்று குறிப்பிட்டுள்ளார்.

May be an image of text that says "நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தப் புனிதமான நாளில், உலகளாவிய போர்ச்சூழல்களிலிருந்து விடுபட்ட அமைதியானதோர் உலகம் உருவாக வேண்டுமென நான் மனமாரப் பிரார்த்திக்கின்றேன். Harini Amasuriya"

Related

Tags: Harini AmarasuriyaMilad-un-Nabi'நபிகள்மீலாதுன் நபி விழாஹரிணி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

Next Post

அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

Related Posts

தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!
இலங்கை

தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

2026-10-11
களுத்துறை துப்பாக்கிச் சூடு: உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழப்பு!
இலங்கை

களுத்துறை துப்பாக்கிச் சூடு: உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழப்பு!

2026-10-11
நாட்டின் பல பகுதிகளில் பிற் பகலுக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் பிற் பகலுக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!

2026-10-11
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!
இலங்கை

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

2026-10-10
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!
இலங்கை

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!
இலங்கை

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

2026-10-10
Next Post
அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

0
களுத்துறை துப்பாக்கிச் சூடு: உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழப்பு!

களுத்துறை துப்பாக்கிச் சூடு: உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழப்பு!

0
நாட்டின் பல பகுதிகளில் பிற் பகலுக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் பிற் பகலுக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!

0
டெல்லியில் சுமார் 1,000 போராட்டக்காரர்கள் தடுத்து வைப்பு!

டெல்லியில் சுமார் 1,000 போராட்டக்காரர்கள் தடுத்து வைப்பு!

0
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

0
தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

2026-10-11
களுத்துறை துப்பாக்கிச் சூடு: உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழப்பு!

களுத்துறை துப்பாக்கிச் சூடு: உணவக உரிமையாளரின் மனைவியும் உயிரிழப்பு!

2026-10-11
நாட்டின் பல பகுதிகளில் பிற் பகலுக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் பிற் பகலுக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!

2026-10-11
டெல்லியில் சுமார் 1,000 போராட்டக்காரர்கள் தடுத்து வைப்பு!

டெல்லியில் சுமார் 1,000 போராட்டக்காரர்கள் தடுத்து வைப்பு!

2026-10-10
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

2026-10-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: