அம்பலாங்கொடை, கண்டேகொட மயானத்தில் கல்லறை ஒன்றுக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவமும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று (17) முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மாத்தறை விசேட அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, மயான வளாகத்திலுள்ள கல்லறை ஒன்றுக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.4 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்காகவே குறித்த இடத்தில் அவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.















