சீனாவின் ‘ஷென்சோ-24’ (Shenzhou-24) விண்கலம் புதன்கிழமை (25) காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இதில் மூன்று பேர் கொண்ட குழுவினர் பயணம் செய்கின்றனர் அவர்களுள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் இடம்பெற்றுள்ளார்.
இவர் ‘டியாங்கோங்’ (Tiangong) விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் ஆவார்.
லாங் மார்ச்-2எஃப் (Long March-2F) ரொக்கெட்டைப் பயன்படுத்தி, வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து அந்த விண்கலம் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 8:18 மணிக்கு (0018 GMT) விண்ணில் ஏவப்பட்டது.
40 வயதான விமானி ஜீஷான் அலி, விண்வெளிப் பாதையை அடைந்த முதல் பாகிஸ்தானியர் ஆவார்.
அவர் ‘பேலோட் ஸ்பெஷலிஸ்ட்’ (payload specialist) ஆகப் பணியாற்றுவதுடன், விண்வெளி நிலையத்தில் 5 முதல் 10 நாட்கள் தங்கி பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள உள்ளார்.
அவருடன் சீனத் தளபதி டாங் ஹாங்போ மற்றும் விமானப் பொறியாளர் வூ யி ஆகியோரும் உடன் செல்கின்றனர்.













