• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர

இலங்கையில் கரும்புலிகள் தினத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் – அனுர வெளியிட்ட தகவல்!

Dhackshala by Dhackshala
2022/07/04
in இலங்கை, பிரதான செய்திகள்
144 1
A A
0
71
SHARES
2.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கரும்புலிகள் தினத்தில் வெடிகுண்டுத்தாக்குதல் நடத்தப்படலாம் எனும் செய்தியின் உண்மையை அரசாங்கம் உடனடியாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கமே இவ்வாறான செய்பாடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கமானது பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள நாட்டை மீண்டும் குழப்ப முயற்சித்து வருகிறது.

2022 ஜுன் 27 ஆம் திகதி, பாதுகாப்புச் செயலாளரான கமால் குணரட்னவுக்கு பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 29 ஆம் திகதி பாதுகாப்புச் செயலகத்திற்கு இந்தக்கடிதம் கிடைத்துள்ளது.

இந்தக் கடிதத்தில் ஜுலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஆரம்பமாகவுள்ள கரும்புலிகள் தினத்தை இலக்கு வைத்து, வெளிநாட்டு புலனாய்வு அமைப்பொன்று வடக்கில் அல்லது தெற்கில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் யாழில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோர் மற்றும் வி.ஐ.பிக்களுக்கு எந்தவொரு நிகழ்விலும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பொன்றின் ஊடாக வெடி குண்டு தாக்குதல் நடத்தப்படலாம் எனும் செய்தியை பொலிஸ் மா அதிபர் ஊடாக, பாதுகாப்புச் செயலாளருக்க அரசாங்கம் தெரியப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அரசாங்கம் உடனடியாக நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்தத் தகவலானது யார் ஊடாக கிடைத்தது? இந்த செய்தி உண்மையா? என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

இதனை அரசாங்கம் செய்யத் தவறினால், அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை திசைத்திருப்பவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சந்தேகிக்கப்படும்.

எனவே, இந்த வெடிகுண்டு அச்சுறுத்தலும் அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலாக இருக்குமோ எனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமையால், மீளவும் அதிகாரத்தைக் கைப்பற்ற எதையும் செய்யக்கூடிய நிலையில்தான் இந்த அரசாங்கம் உள்ளது. மக்களும் இதுதொடர்பாக அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: அநுரகுமார திஸாநாயக்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை வியன்னா உடன்படிக்கையினை மீறி செயற்படும் நிலை?

Next Post

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்!

Related Posts

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!
இலங்கை

2026-04-27
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

2026-04-27
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம் நிகழ்வு!

ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு: அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது – அனுர

அரசுக்கு எதிரான போராட்டங்களை தொடருங்கள் - அனுர அழைப்பு

இந்தியா- சீனாவுக்கு இடையில் 12ஆவது சுற்று பேச்சுவார்த்தை

இந்திய வெளிவிவகார அமைச்சரை பாராட்டியது சீனா!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

0
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

0
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

0
மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

0
இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

0
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

2026-04-27
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

2026-04-27
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

2026-04-27
மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

2026-04-27
இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

2026-04-27

Recent News

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

2026-04-27
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

2026-04-27
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

2026-04-27
மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

2026-04-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.