• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியது இந்தியா!

அறுகம்பே தாக்குதல் திட்டம்-இந்திய புலனாய்வு அமைப்பு அறிவிப்பு!

Rahul by Rahul
2024/10/23
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
73 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக இன்று
தெரியவந்துள்ளது.

அதன்படி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அருகம்பே, சர்பிங் செய்பவர்கள் அடிக்கடி வரும் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அந்தப் பகுதி இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் பகுதியும் கூட. இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பே பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளன.

இதேவேளை இது தொடர்பான தாக்குதல் அக்டோபர் 19 முதல் 23 வரை நடத்தப்படலாம் என இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கைச் சேர்ந்தவர் என்றும் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலுக்காக அவர்களுக்கு சுமார் 50 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாகவும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த இருவரின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்திய புலனாய்வு அமைப்புகளால் இந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் ஹிஸ்புல்லாஹ் தலைவர்களை இஸ்ரேல் கொன்றமைக்கு பழிவாங்கும் முகமாக இந்த நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலைப் பெற்றுக்கொண்ட பாதுகாப்பு தரப்பினர் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்தி அங்குள்ள வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளர்.

அறுகம்பே பிரதேசத்தின் பாதுகாப்பின் பின்னணியில் இஸ்ரேலியர்கள் வருகை தரும் வெலிகம உட்பட தென் மாகாணத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் எல்ல பிரதேசத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அறுகம்பே மற்றும் தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு நாட்டில் தங்கியுள்ள இஸ்ரேலிய மக்களை இஸ்ரேலிய தேசிய பாதுகாப்புத் தலைமையகம் இன்று அறிவித்தது.

இதன்படி, அறுகம்பே கரையோரத்திற்கு மேலதிகமாக காலி, ஹிக்கடுவ மற்றும் வெலிகம போன்ற பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய பிரஜைகளை அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள பகுதிக்கு உடனடியாக செல்லுமாறும் அல்லது உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும் இஸ்ரேல் அரசாங்கம் இந்த அறிவிப்பின் மூலம் அவர்களுக்கு அறிவித்திருந்தது.

இதனிடையே, ஹீப்ரு சின்னங்கள் மற்றும் யூத மதத்தை பரப்பும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என்றும், பாதுகாப்பற்ற இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: athavannewsattackINDIAlkanewspolicesrilankatouistupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மக்கள் இம்முறை இளையோருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்!

Next Post

கனேடிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

Related Posts

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!
இலங்கை

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

2026-03-07
சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்
கிழக்கு மாகாணம்

சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

2026-03-07
சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்
யாழ்ப்பாணம்

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

2026-03-07
கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!
இலங்கை

கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

2026-03-07
அக்குரேகொட இரட்டைக்கொ*லை: மேலும் இருவர் கைது!
இலங்கை

அக்குரேகொட இரட்டைக்கொ*லை: மேலும் இருவர் கைது!

2026-03-07
வடகிழக்கு இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்!
இஸ்ரேல்

ஈரானில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்!

2026-03-07
Next Post
கனேடிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

கனேடிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

மேற்கிந்திய தீவுகள் அணிக்களுக்கான தொடரை  கைப்பற்றிய இலங்கை!

மேற்கிந்திய தீவுகள் அணிக்களுக்கான தொடரை கைப்பற்றிய இலங்கை!

WEATHER FORECAST FOR 24 OCTOBER 2024

இன்றும் பல பகுதிகளில் பலத்த மழை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

0
பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

0
சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

0
சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

0
கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

0
பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

2026-03-07
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

2026-03-07
சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

2026-03-07
சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

2026-03-07
கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

கிழங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றுழியர்கள் மூவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் மூறைப்பாடு!

2026-03-07

Recent News

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

2026-03-07
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

2026-03-07
சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

2026-03-07
சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

2026-03-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.