2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைபை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மீளாய்வு செய்தார்.
இந்நிகழ்வில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்துகொண்டார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாளை (17) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.















