(Carmarthenshire) கார்மார்த்தன்ஷயர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் இருந்து பெருந்தொகையான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வேகமாக ஓடும் நீரில் சிக்கிய வாகனத்திலிருந்து மூன்று பேர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தங்குமிடத்தில் உள்ள நாய்க்குட்டிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட நாய்கள் மீட்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு வேல்ஸின் சில பகுதிகளில் இரவு முழுவதும் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து, மக்கள் தங்கள் வீடுகளிலும் வாகனங்களிலும் சிக்கிக்கொண்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் பாரிய சிரமத்திற்கு மத்தியில் எதிர்கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெற்கு வேல்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையை உள்ளடக்கிய கூட்டு தீயணைப்பு கட்டுப்பாடு , 12 மணி நேரத்திற்குள் 450 க்கும் மேற்பட்ட அனர்த்த மீட்பு அழைப்புகளைப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு பராமரிப்பு இல்லத்திலிருந்து நாற்பத்தெட்டு பேர் மீட்கப்பட்டதுடன் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் இருந்து 40 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.














