இங்கிலாந்தின் (Leicestershire) லெய்செஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு வெளிய நடந்த மோதலில் காயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணையினை மேற்கொண்டுவருகின்றனர்.
கடந்த 21ஆம் திகதி லெய்செஸ்டர்ஷையர் பகுதியில் இடம்பெற்ற மோதலில் தாக்கப்பட்ட 66 வயது மதிக்கத்தக்க (David Darke) டேவிட் டார்க் என்பவர், தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட 36 வயது நபர், தற்போது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் மீண்டும் விசாரிக்கப்பட்டுவருகிறார்.
இதேவேளை, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.
மேலும் குறித்த சம்பவத்தின் பின்னணியைக் கண்டறிய சிறப்புக் குழுவினர் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

















