மலர்ந்துள்ள 2026 ஆண்டின் முதல்நாள் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் மற்றும் அரச திணைக்களங்களில் இன்று காலை இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் தேசிய கீதத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா மாவட்ட செயலகத்திலும் அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணம் செய்து தமது கடமைகளை இன்றைய தினம் ஆரம்பித்தனர்.
அரசாங்க அதிபர் தேசிய கொடியை ஏற்றியிருந்ததுடன் இரண்டு நிமிட மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இதேவேளை, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் இன்று திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் சத்தியப்பிரமான நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை 2026ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ பொது சேவை உறுதிமொழி நிகழ்வு இன்று (காலை ஹட்டன் பிரதேச காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்திருந்ததுடன் 2026ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

















