ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்வதற்காக வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தனது குடிமக்கள் 32 பேர் உயிரிழந்ததாக கியூப அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், இறுதிச் சடங்குகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் ஹவானா குறிப்பிட்டுள்ளது.
கியூப அரசாங்க அறிக்கை சில விவரங்களை மட்டுமே அளித்தது.
ஆனால் இறந்தவர்கள் அனைவரும் கியூப ஆயுதப்படைகள் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அது கூறியது.
மதுரோ ஆட்சிக்கு வந்ததிலிருந்து கியூபா அவருக்கு ஓரளவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.
63 வயதான மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் சனிக்கிழமை வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் மதுரோ நியூயோர்க் தடுப்பு மையத்தில் திங்கட்கிழமை (04) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காத்துள்ளனர்.




















