சட்டவிரோதமாக விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட சோதனையில் 57,200 சிகரெட்டுகள் அடங்கிய 286 அட்டைப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
18 மற்றும் 42 வயதுடைய சந்தேக நபர்கள் இஹல கொட்டாரமுல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.












