19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில், நேற்றையதினம் (18) ஆஸ்திரேலியாவை 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை இளையோர் மகளிர் அணி திரில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன், இலங்கை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய இளையோர் மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இந்த முக்கோணத் தொடரில், இலங்கை அணி தான் எதிர்கொண்ட 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, தொடரின் ஒரேயொரு தோல்வியுறாத அணியாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
















