சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த சீன நாட்டவர் ஒருவர் இன்று காலை (20) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 35 வயதான சீனத் தொழிலதிபர் ஆவார்.
இவர் இதற்கு முன்னர் மூன்று முறை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர் இந்த சிகரெட்டுகளை சீனாவிலிருந்து வாங்கி, தாய்லாந்தின் பாங்கொக்கிற்குக் கொண்டு வந்திருந்தார்.
அங்கிருந்து இன்று காலை 12.55 மணிக்கு தாய் ஏர்வேஸ் விமானம் TG-307 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்திருந்த 13 பயணப் பைகளில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 8 வகையான சிகரெட்டுகளைச் சேர்ந்த 229,800 சிகரெட்டுகள் அடங்கிய 1,149 அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
மேலும், சிகரெட் கையிருப்பின் பெறுமதி சுமார் 3 கோடியே 44 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை விமனா நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.













