ஈரான் மீதான போர் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் திருட்டுச் சம்பவங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 62% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரட்டப்பட்ட புதிய தரவுகளின்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பிச் செல்லும் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
ஒரு சராசரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாரத்திற்கு 2.1 ஆக இருந்த இத்தகைய சம்பவங்கள், தற்போது 3.4 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் மேற்கொண்டு வரும் போர் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒரு சாதாரண குடும்பக் காரில் பெட்ரோல் நிரப்புவதற்கான செலவு 14 பவுண்ட் அதிகரித்துள்ளது.
இதனால் எரிபொருள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
பொலிஸார் இத்தகைய குற்றவாளிகளைக் கண்டறியவும், மீண்டும் திருட்டில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்தவும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.















