போதைப்பொருட்களை ஒழிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ‘‘முழு நாடும் என்றாக’’ தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட மொத்தம் 25 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகளின் போது, மொத்தம் 25,683 நபர்கள் சோதனையிடப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், தற்போது நடைபெற்று வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு முயற்சியின் கீழ் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, சந்தேகத்தின் பேரில் 396 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிடியாணையுடன் தொடர்புடைய 191 நபர்களும், நிலுவையில் உள்ள திறந்த பிடியாணையுடன் தொடர்புடைய 91 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, மதுபோதையில் வாகனம் செலுத்திய 67 நபர்களும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 51 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இது தவிர பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 3,332 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.













