யாழ்ப்பாணம், கட்டக்காடு கடற்கரைப் பகுதியில் ஒளிக்கற்றைகளைப் (Light Course) பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை ‘வெற்றிலைக்கேணி’ ( Vettalakeni) கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த நேற்று இரவு 10:40 மணியளவில், புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நான்கு சிறு படகுகளில் சட்டவிரோத விளக்குகள் மற்றும் மின்கலங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஏப்ரல் 21 அதிகாலை 01:30 மணியளவில் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை 10:30 மணியளவில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூன்று நபர்கள் கட்டைக்காடு முள்ளியான் பகுதியை சேர்ந்தவர்களும் மற்றய நபர் ஆழியவளையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது .













