யாழ் மருத்துவ சங்கமும், மருத்துவப் பிரதிநிதிகள் சங்கமும் இணைந்து நடாத்திய இலவச மருத்துவ முகாம் நேற்று கீரிமலை கருகம்பனை கலாசார மண்டபத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் சேவையின் தேவை கருதி யாழ்ப்பாண மருத்துவ சங்கம், மற்றும் மருத்துவப் பிரதிநிதிகள் சங்கமும் இணைந்து நடாத்திய இலவச மருத்துவ முகாம் யாழ்ப்பாணம் கீரிமலையில் காலை 9.00 முதல் நண்பகல் 12.00 மணிவரை இடம்பெற்றது.
மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு ஆரம்பமான நிகழ்வில் பொது மருத்துவ நிபுணர்கள், குழந்தைகள், சிறுவர் சத்திர சிகிச்சை நிபுணர்கள், குழந்தை மருத்துவ நிபுணர், மகப்பேறு மற்றும் பெண்நோயியல் நிபுணர், தோல் சிகிச்சை நிபுணர், பொது சத்திர சிகிச்சை நிபுணர் உட்பட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்களது ஆலோசனைகளும், சிகிக்சைகளும் வழங்கப்பட்டதுடன் இணங்காணப்பட்ட நோயாளர்களுக்கான இலவச மருந்துப் பொருட்கள் வழங்கல், மேலதிக சிகிச்சை தேவைப்படுவோருக்கு அரச வைத்திய சாலைகளினுடாக சிகிச்சை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த மருத்துவ சேவை முகாமிற்கான மருந்துப் பொருட்கள், குளுக்கோசு பரிசோதனை என்பவை யாழ்ப்பாண மருத்துவப் பிரதிநிதிகள் சங்கத்தால் இலவசமாக வழங்கப்படிருந்தது.
இதில் 100 க்கு மேற்பட்டோர் கணக்கானோர் பயன் பெற்றனர் .













