வெளிநாட்டுப் பயணங்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார்.
அண்மையில் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ”பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்குமாறும் பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறும் ஓராண்டுக்கு வெளிநாட்டு சுற்றுலாவை தவிர்க்குமாறும் கோரிக்கைகளை மக்களிடம் முன் வைத்தார்.
இதனால் பொதுமக்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய சிறப்பு வரி அல்லது கூடுதல் செஸ் வரி விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில் வெளிநாட்டுப் பயணத்துக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை பிரதமர் மோடி மறுத்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, இது முற்றிலும் பொய்யான தகவல் எனவும் இதில் ஒரு துளிகூட உண்மை இல்லை எனவும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடு விதிக்கப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை எனவும் வணிகம் செய்வதை எளிதாக்குவதையும், மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

















