கொழும்பில் இன்று (19) பிற்பகல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாக இன்று நடைபெறும் தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வினை முன்னிட்டு இந்த விசேட போக்குவரத்து செயல் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, இன்று மாலை 3.30 மணி முதல் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலும், கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் கியஹேம் சந்தியிலும் கட்டுப்படுத்தப்பட்டு, பின்வரும் மாற்று வழிகளில் திருப்பி விடப்படும்.
மாற்று வழிகள்:-
நாடாளுமன்ற வீதியூடாக கொழும்பிலிருந்து வெளியேற வரும் வாகனங்கள் பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்லை, பாலன்துன, கியன்னேம் சந்தி ஊடாக பயணிக்க முடியும்.
கியன்னேம் சந்தியிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலன்துன, பத்தரமுல்லை ஊடாக பயணிக்க முடியும்.
ரஜமல்வத்த பகுதியிலிருந்து போதிராஜ மாவத்தை ஊடாக வரும் வாகனங்கள் பத்தரமுல்லை வீதியை வந்தடைந்து, தேவையான வீதி வழியே பயணிக்க முடியும்.
பேருந்துகள் மற்றும் லொறிகளை நிறுத்துவதற்கான இடங்கள்:-
ஜப்பான் நட்பு வீதி சந்தியிலிருந்து கிம்புலாவல சந்தி வரை.
ஜப்பான் நட்பு வீதி மின்சார சபைக்கு அருகிலிருந்து பெலவத்த வரை.













