• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/08
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள உதயநகர் மேற்கு, கிளிநொச்சியை நிரந்தர முகவரியாகக் கொண்ட சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் விடுதலை தொடர்பான விடயத்தினை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.

தனது இனத்தின் வரலாற்று வலிகளையும், இழப்புகளையும், மன உணர்வுகளையும் இசை மற்றும் பாடல் வழியாக வெளிப்படுத்திய ஓர் இளைஞன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழ் மக்களிடையே மிகுந்த அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கலைப் படைப்பின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை குற்றமாகக் கருதி, அதற்காக ஓர் இளைஞனின் சுதந்திரம் பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது, இந்த நாட்டில் தமிழர்கள் எதிர்கொள்ளும் கருத்துரிமைச் சவால்களின் தீவிரத்தையே எடுத்துக்காட்டுவதாக மக்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, தமிழ் மக்களினதும் இளைஞர்களினதும் நம்பிக்கையையும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பையும் அடித்தளமாகக் கொண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இத்தகைய கைது இடம்பெற்றிருப்பது, தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான ஏமாற்றத்தையும் நம்பிக்கைச் சிதைவையும் ஏற்படுத்தியுள்ளது.

சமத்துவம், நீதி, ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை முன்னிறுத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் இவ்வாறான நடவடிக்கைகளால் கேள்விக்குள்ளாகின்றன.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலங்களில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளும் கூட, தமிழர் ஆயுதப் போராட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாடல்கள், நினைவுகள் மற்றும் அரசியல் குறியீடுகள் காணப்பட்ட சூழல்களில் மக்களின் ஆதரவை நாடியமை மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.

அவ்வாறிருக்க, ஒரு இளைஞன் பாடல் ஒன்றை வெளியிட்டதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது, சட்டத்தின் பயன்பாடு தொடர்பில் பாரிய முரண்பாடுகளையும் நியாயப்பூர்வமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கை சங்கீத்சன் என்ற இளைஞனின் தற்போதைய சுதந்திரத்தை மட்டுமல்லாது, அவரது எதிர்காலக் கல்வி, தொழில், சமூக வாழ்வு மற்றும் கலைப் பயணத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அதேவேளை, அவரது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றமை துயர்மிகுந்த விடயமாகும்.

ஒரு ஜனநாயக நாட்டின் உயரிய பொறுப்பில் அமர்ந்திருக்கும் தாங்கள், சட்டத்தின் ஆட்சியை மதிப்பதோடு மட்டுமல்லாது, நீதியின் உயிரையும் மனிதாபிமானத்தின் விழுமியங்களையும் காக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பையும் சுமக்கின்றீர்கள்.

இவ்விடயத்தில் மனிதாபிமான அடிப்படையிலும், நல்லிணக்கத்தின் அடிப்படையிலும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமநீதியை உறுதிப்படுத்தும் அடிப்படையிலும் தங்களது நேரடி தலையீட்டின் மூலம், கைது செய்யப்பட்டுள்ள கலைஞர் சங்கீத்சனை தங்களது அரசியலமைப்புச் சட்ட அதிகாரங்களின் கீழ் பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் உடனடி விடுதலையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தகைய மனிதாபிமானமான தீர்மானமொன்று தமிழ் மக்களின் மனங்களில் நீதியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாது, இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.” என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று பார்வையிட்டதுடன் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

blank

Related

Tags: ptasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!

Next Post

வட கொரியாவில் தரையிறங்கினார் சீன ஜனாதிபதி!

Related Posts

வட கொரியாவில் தரையிறங்கினார் சீன ஜனாதிபதி!
உலகம்

வட கொரியாவில் தரையிறங்கினார் சீன ஜனாதிபதி!

2026-06-08
யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு
இலங்கை

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு

2026-06-08
யாழில் மேடை பேச்சுடன் நிகழ்வை முடித்ததாக சலசலப்பு
இலங்கை

யாழில் மேடை பேச்சுடன் நிகழ்வை முடித்ததாக சலசலப்பு

2026-06-08
திறைசேரி நிதி காணாமல் போனமை தொடர்பில்  கலந்துரையாட அரசாங்க நிதிப் பற்றிய குழு  கூடவுள்ளது!
இலங்கை

திறைசேரி நிதி காணாமல் போனமை தொடர்பில் கலந்துரையாட அரசாங்க நிதிப் பற்றிய குழு கூடவுள்ளது!

2026-06-08
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

பல பகுதிகளில் 3 நாள் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்!

2026-06-08
நீராடச் சென்ற ஒருவர் உயிரிழப்பு!
இலங்கை

நீராடச் சென்ற ஒருவர் உயிரிழப்பு!

2026-06-08
Next Post
வட கொரியாவில் தரையிறங்கினார் சீன ஜனாதிபதி!

வட கொரியாவில் தரையிறங்கினார் சீன ஜனாதிபதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026-06-01
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
வட கொரியாவில் தரையிறங்கினார் சீன ஜனாதிபதி!

வட கொரியாவில் தரையிறங்கினார் சீன ஜனாதிபதி!

0
கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

0
‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!

‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!

0
தெஹ்ரானில் சர்வதேச விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டது

தெஹ்ரானில் சர்வதேச விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டது

0
பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்!

பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்!

0
வட கொரியாவில் தரையிறங்கினார் சீன ஜனாதிபதி!

வட கொரியாவில் தரையிறங்கினார் சீன ஜனாதிபதி!

2026-06-08
கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

2026-06-08
‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!

‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!

2026-06-08
தெஹ்ரானில் சர்வதேச விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டது

தெஹ்ரானில் சர்வதேச விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டது

2026-06-08
யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு

யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு

2026-06-08

Recent News

வட கொரியாவில் தரையிறங்கினார் சீன ஜனாதிபதி!

வட கொரியாவில் தரையிறங்கினார் சீன ஜனாதிபதி!

2026-06-08
கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

2026-06-08
‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!

‘டெக்​சாஸ் டைகர்’ – வெற்றிகரமாக முடிந்த படப்பிடிப்பு!

2026-06-08
தெஹ்ரானில் சர்வதேச விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டது

தெஹ்ரானில் சர்வதேச விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டது

2026-06-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.