• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!

போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/05
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

கார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திச் சென்றவர்களை துரத்தி சென்று பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் நேற்று (4) இடம்பெற்றது.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது 32 ,33, 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டதுடன் ஹெரோயின் போதைப்பொருள் 15 கிராம் 370 மில்லி கிராம் உட்பட சொகுசு கார், மோட்டார் சைக்கிள், இரு கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம் ,வங்கி அட்டைகள் ,சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சட்டநடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் சான்றுப்பொருட்களுடன் ஒப்படைக்கப்பட்டனர்.

அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய அதிகாலை 3 மணியளவில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றை மையப்படுத்தி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர்.

இதன் போது குறித்த வீட்டின் அருகில் இருந்து திடீரென கார் ஒன்றில் இருவர் தப்பி சென்றதுடன் தப்பிச் சென்றவர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரத்திச் சென்றனர்.

இவ்வாறு துரத்திச் சென்ற போது மற்றொரு சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றின் உதவியுடன் தப்பி சென்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்.

இதனை அவதானித்த அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவின் தரப்பினர் அச்சந்தேக நபரை கைது செய்ததுடன் தப்பி சென்ற காரை சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக மறித்து தடுத்து நிறுத்தினர்.

இதன் போது மங்காத்தா திரைப்பட பாணியில் பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி தப்பி சென்ற காரை தலைக்கவசத்தினால் எறிந்து தடுத்து நிறுத்தி காரில் இருந்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை இரகசிய தகவலுக்கமைய ஏற்கனவே சோதனை மேற்கொண்ட வீட்டில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் வருகை தருவதற்கு முன்னர் சுமார் கிலோ கணக்கில் போதைப்பொருட்கள் பல பகுதிகளிலும் உள்ள விநியோகஸ்தர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சந்தேக நபர்களை கைது செய்த இடத்திற்கு பொலிஸ் தடயவியல் பிரிவு மோப்ப நாய் பிரிவு உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு தரப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்(SDIG) சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG ) சுஜித் வேதமுல்லவின் வழிகாட்டலில் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரியந்த பண்டார கஸ்தூரியாரச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் (IP) ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தச் சோதனையில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த மாதமும் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கருகாமையில் கடவுளின் பிள்ளை என அழைக்கப்படும் 23 வயதுடைய பெண் சந்தேக நபரும் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இக்கைது நடவடிக்கையினால் அந்த ஊர் மக்கள் இரவு முழுவதும் பட்டாசு கொளுத்தி தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related

Tags: Amparaisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் வார இறுதியின் முக்கிய ஃபார்முலா கார் பந்தயம் 3 இன்று !

Next Post

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

Related Posts

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!
இலங்கை

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

2026-08-17
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

2026-08-17
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!
இலங்கை

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

2026-08-17
தேசிய பட்டியலுக்காக போட்டியிட்ட 74 பேருக்கு எதிராக வழக்கு
இலங்கை

தனியார் வங்கிகளின்முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

2026-08-17
கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!
இலங்கை

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

2026-08-17
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

இலஞ்சம் வாங்கிய நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்குப் பிணை !

2026-08-17
Next Post
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

0
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

0
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

0
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

0
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

0
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

2026-08-17
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

2026-08-17
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

2026-08-17
செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியின் 108 ஆவது நாள் அகழ்வு பணிகள்

2026-08-17
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே!

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.