சென்னை மாநில கல்லூரியில் அரசு மருத்தவ சேவைகளை டிஜிட்டல் முறையில் கொண்டு சேர்க்கும் ‘நலம் TN’ இணையதள சேவையை முதல்வர் விஜய் துவங்கி வைத்தார்.
மேலும் மருத்துவ கட்டடங்களை திறந்து வைத்ததுடன், 2 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
தமிழக அரசு மருத்துவ சேவைகளை டிஜிட்டல் முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நலம் டிஎன் என்ற இணையதளத்தையும் முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்.
அதன் சின்னத்தையும் அறிமுகம் செய்து வைத்தார்.
139.47 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 86 மருத்துவ கட்டடங்கள், நவீன உபகரணங்களையும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நலம் TN திட்டத்திற்கு பல தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், அமைப்புகள் நிதி வழங்கின.
இதனை தொடர்ந்து, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட சுகாதாரத்துறையில் உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் உட்பட பணி 2 ஆயிரம் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார். அதில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் ஆவார்கள்.












