• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டுவில் 8 பேர் கைது

Human fingerprints and handcuffs

மட்டக்களப்பில் “டெஸ்ட் டிரைவ்” செய்வதாகக் கூறி மோட்டார் சைக்கிள்களைத் திருடிய வாலிபர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/20
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள்களை ஓட்டிப் பார்ப்பதாகக் கூறி, அவற்றைத் திருடிச் சென்ற நூதனத் திருடன் ஒருவரை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் நேற்று (19) கைது செய்துள்ளனர்.

சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இந்தச் சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், காத்தான்குடிப் பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்ற சந்தேகநபர், அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதாகக் கூறி, அதனை ஓட்டிப் பார்ப்பதற்காகக் கடை உரிமையாளரிடமிருந்து பெற்றுக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

பின்னர், திருடப்பட்ட அந்த மோட்டார் சைக்கிளுடன் மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் உள்ள வீதிச் சமிக்ஞை விளக்குக்கு அருகில் வந்துள்ளார்.

அங்கிருந்தபடியே ‘Ikman.lk’ இணையத்தளத்தில் தனது மோட்டார் சைக்கிளை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்த கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த நபரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரது மோட்டார் சைக்கிளை வாங்குவதாகக் கூறி குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த நபர் தனது மோட்டார் சைக்கிளுடன் அங்கு வந்ததும், சந்தேகநபர் அவரது மோட்டார் சைக்கிளையும் ஓட்டிப் பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

அதற்கு உபகரமாக, தான் காத்தான்குடியில் இருந்து திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் நம்பிக்கையாகக் கொடுத்துவிட்டு, அந்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

இவ்வாறு திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை அவர் வாகரைப் பகுதியில் கொண்டு சென்று விற்பனை செய்துள்ளார் என்பது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டிலும் இதேபோன்றதொரு மோட்டார் சைக்கிள் திருட்டை இவர் அரங்கேற்றியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கடந்த காலங்களில் 8 குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுக் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்தவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related

Tags: Batticaloasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மெஸ்ஸியின் கண்ணீரை துடைத்த யமால்; நெகிழவைத்த தருணம்!

Next Post

மாயாஜாலம் முடிந்ததா? மெஸ்ஸியின் மறக்க முடியாத இறுதி அத்தியாயம்!

Related Posts

மெஸ்ஸியின் கண்ணீரை துடைத்த யமால்; நெகிழவைத்த தருணம்!
பல்சுவை

மெஸ்ஸியின் கண்ணீரை துடைத்த யமால்; நெகிழவைத்த தருணம்!

2026-07-20
டெங்கு காய்ச்சலால்  19 பேர் உயிரிழப்பு
இலங்கை

டெங்கு பரவல் உச்சத்தில்! நாடு முழுவதும் 76,000-ஐ கடந்த பாதிப்புகள்

2026-07-20
சுற்றுலாத்துறையை மேம்படுத்த பொதுச் சுகாதார வசதிகளை, உள்ளூராட்சி மன்றங்கள் தினசரி அவதானிக்க வேண்டும் – விவேகானந்தன் கோரிக்கை !

வேலணை நூடில்ஸ் உற்பத்தி நிலையதத்திற்கு  கைத்தொழில் பிரதி அமைச்சர் களவிஜயம்!

அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களையும் சோதனை மேற்கொள்ளத் தீர்மானம்!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் இன்று!
இலங்கை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் இன்று!

2026-07-20
Next Post
மாயாஜாலம் முடிந்ததா? மெஸ்ஸியின் மறக்க முடியாத இறுதி அத்தியாயம்!

மாயாஜாலம் முடிந்ததா? மெஸ்ஸியின் மறக்க முடியாத இறுதி அத்தியாயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
மாயாஜாலம் முடிந்ததா? மெஸ்ஸியின் மறக்க முடியாத இறுதி அத்தியாயம்!

மாயாஜாலம் முடிந்ததா? மெஸ்ஸியின் மறக்க முடியாத இறுதி அத்தியாயம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

மட்டக்களப்பில் “டெஸ்ட் டிரைவ்” செய்வதாகக் கூறி மோட்டார் சைக்கிள்களைத் திருடிய வாலிபர் கைது!

0
மெஸ்ஸியின் கண்ணீரை துடைத்த யமால்; நெகிழவைத்த தருணம்!

மெஸ்ஸியின் கண்ணீரை துடைத்த யமால்; நெகிழவைத்த தருணம்!

0
சுற்றுலாத்துறையை மேம்படுத்த பொதுச் சுகாதார வசதிகளை, உள்ளூராட்சி மன்றங்கள் தினசரி அவதானிக்க வேண்டும் – விவேகானந்தன் கோரிக்கை !

சுற்றுலாத்துறையை மேம்படுத்த பொதுச் சுகாதார வசதிகளை, உள்ளூராட்சி மன்றங்கள் தினசரி அவதானிக்க வேண்டும் – விவேகானந்தன் கோரிக்கை !

0
வேலணை நூடில்ஸ் உற்பத்தி நிலையதத்திற்கு  கைத்தொழில் பிரதி அமைச்சர் களவிஜயம்!

வேலணை நூடில்ஸ் உற்பத்தி நிலையதத்திற்கு கைத்தொழில் பிரதி அமைச்சர் களவிஜயம்!

0
மாயாஜாலம் முடிந்ததா? மெஸ்ஸியின் மறக்க முடியாத இறுதி அத்தியாயம்!

மாயாஜாலம் முடிந்ததா? மெஸ்ஸியின் மறக்க முடியாத இறுதி அத்தியாயம்!

2026-07-20
மட்டுவில் 8 பேர் கைது

மட்டக்களப்பில் “டெஸ்ட் டிரைவ்” செய்வதாகக் கூறி மோட்டார் சைக்கிள்களைத் திருடிய வாலிபர் கைது!

2026-07-20
மெஸ்ஸியின் கண்ணீரை துடைத்த யமால்; நெகிழவைத்த தருணம்!

மெஸ்ஸியின் கண்ணீரை துடைத்த யமால்; நெகிழவைத்த தருணம்!

2026-07-20
டெங்கு காய்ச்சலால்  19 பேர் உயிரிழப்பு

டெங்கு பரவல் உச்சத்தில்! நாடு முழுவதும் 76,000-ஐ கடந்த பாதிப்புகள்

2026-07-20
சுற்றுலாத்துறையை மேம்படுத்த பொதுச் சுகாதார வசதிகளை, உள்ளூராட்சி மன்றங்கள் தினசரி அவதானிக்க வேண்டும் – விவேகானந்தன் கோரிக்கை !

சுற்றுலாத்துறையை மேம்படுத்த பொதுச் சுகாதார வசதிகளை, உள்ளூராட்சி மன்றங்கள் தினசரி அவதானிக்க வேண்டும் – விவேகானந்தன் கோரிக்கை !

2026-07-20

Recent News

மாயாஜாலம் முடிந்ததா? மெஸ்ஸியின் மறக்க முடியாத இறுதி அத்தியாயம்!

மாயாஜாலம் முடிந்ததா? மெஸ்ஸியின் மறக்க முடியாத இறுதி அத்தியாயம்!

2026-07-20
மட்டுவில் 8 பேர் கைது

மட்டக்களப்பில் “டெஸ்ட் டிரைவ்” செய்வதாகக் கூறி மோட்டார் சைக்கிள்களைத் திருடிய வாலிபர் கைது!

2026-07-20
மெஸ்ஸியின் கண்ணீரை துடைத்த யமால்; நெகிழவைத்த தருணம்!

மெஸ்ஸியின் கண்ணீரை துடைத்த யமால்; நெகிழவைத்த தருணம்!

2026-07-20
டெங்கு காய்ச்சலால்  19 பேர் உயிரிழப்பு

டெங்கு பரவல் உச்சத்தில்! நாடு முழுவதும் 76,000-ஐ கடந்த பாதிப்புகள்

2026-07-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.