இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) முன்னாள் தலைவரான உபாலி தர்மதாச (Upali Dharmadasa) தனது 72வது வயதில் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பல ஆண்டுகள் முக்கியப் பொறுப்புகளை வகித்த உபாலி தர்மதாச, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராகப் பணியாற்றி நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்குப் பல்வேறு காத்திரமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
அவரது மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை, முன்னணி விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டுப் பிரியர்கள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
















