தெற்கு பாகிஸ்தானில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வெடிவிபத்தில் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த வெடிவிபத்தில் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
வெடிவிபத்திற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை, மேலும் அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
















