முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை கொக்கிளாய் வீதியில் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை கொக்குளாய் பொலீசாரின் சோதனை நடவடிக்கையின் போது 2 கிராம் அளவிலான ஹரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
நேற்று (15) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்று பொருட்களும் கொக்குளாய் பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கொக்குளாய் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
குறித்த உப தவிசாளர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது ஜக்கிய மக்கள் சக்தியின் கட்சியில் போட்டியிட்டு “வோணஸ்” ஆசனத்தில் தெரிவான உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.







