முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் காலம் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (25) சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கையை நிராகரித்து, அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
அரசாங்க சம்பள விவகாரங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) சுகீஸ்வர பண்டார கடந்த ஜூன் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.














