கேகாலை தடுப்புக் காவலில் உள்ள ஒரு கைதிக்கு உணவுப் பொட்டலத்தில் கோழிக்கறிக்குள் மறைத்து போதைப்பொருள் கொண்டு வந்த தம்பதியினரை நேற்று (25) மாலை, சிறை அதிகாரிகள் கைது செய்ததாக கேகாலை தடுப்புக் காவல் சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு கைதிக்கு உணவு கொண்டு வந்த தம்பதியினர் இவ்வாறு கைது செய்யப்பட்டு பின்னர் கேகாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மனைவியின் மாமாவுக்கு உணவு கொண்டு வர சிறைக்கு வந்தபோது அங்கிருந்த கோழிக்கறிக்குள் மறைத்து போதைப்பொருள் கொண்டு வந்ததை கைது செய்யப்பட்ட நபர் ஒப்புக்கொண்டதால், அவர் மட்டுமே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரம்புக்கன வஹாவா சந்திப்பைச் சேர்ந்த இந்த நபர், இதற்கு முன்பும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.














