நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பை பொலிஸார் பலப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் ரக வானூர்திகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அறிவுறுத்தியிருந்தார்
இதற்கமைய, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று 16ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.













