விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம, பூங்காவில் இருப்பவர்களை வெளியேற்றுவதற்கு நேற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாற்றமின்றி தொடரும் என கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது
மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி ஏதேனும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க பொலிஸ்ஸாருக்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.















