உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் வைரஸ் தொற்றினால், 15இலட்சத்து நான்காயிரத்து 76பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 17ஆவது நாடாக விளங்கும் உக்ரேனில், இதுவரை 29ஆயிரத்து 253பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 15ஆயிரத்து 53பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 267பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 30ஆயிரத்து 633பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 177பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 12இலட்சத்து 44ஆயிரத்து 190பேர் பூரண குணமடைந்துள்ளனர்.