அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசிகளின் கொள்வனவை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் எச்சரித்துள்ளார்.
ஒப்பந்தமிடப்பட்ட தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் இன்று (சனிக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு வழங்குவதற்கு முன்பு ஐரோப்பாவுடனான ஒப்பந்தத்தை முதலில் நிறைவேற்றுமாறு தடுப்பூசி நிறுவனத்திடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் கொரோனா தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்தப் போராடி வருகின்றது. ஒன்றியத்தின் பல உறுப்பு நாடுகளில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, அங்லோ சுவிடிஸ் (Anglo-Swedish Pharma) மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனெகா இவ்வாண்டின் முதல் காலாண்டில் தருவதாக உறுதியளித்த 90 மில்லியன் தடுப்பூசி அளவுகளில் 30 வீதத்தை மட்டுமே வழங்கியதாக வொன் டெர் லேயன் தெரிவித்தார்.
ஆனால், மருந்து நிறுவனம் தனது ஐரோப்பிய ஒன்றிய ஆலைகளில் உற்பத்தி தாமதமடைவதைச் சுட்டிக்காட்டியது. இந்த சூழலிலேயே, வொன் டெர் லேயன் இந்த எச்சரிப்பை விடுத்துள்ளார்.