நாட்டின் சில பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட சில பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக நாளை இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.