பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மூன்று இலட்சத்து 64பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரான்ஸில் இதுவரை 48இலட்சத்து 33ஆயிரத்து 263பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 96ஆயிரத்து 873பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 10ஆயிரத்து 793பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 197பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 44இலட்சத்து 36ஆயிரத்து 324பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்தாயிரத்து 433பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.