தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
நாளை (புதன்கிழமை) சென்சூரியனில் நடைபெறவுள்ள இப்போட்டியில், தென்னாபிரிக்கா அணிக்கு டெம்பா பவுமாவும் பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் தலைமை தாங்கவுள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
ஆகையால் இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது போட்டி, முக்கிய போட்டியாக அமையவுள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, தொடரை வெல்லும் என்பதால், இப்போட்டியானது இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.